பூண்டும், வெங்காயமும் அதிகம் சாப்பிட கூடாதா?.. காரணத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

மருத்துவம்

சமையல் யாருக்கு பிடிக்குமோ இல்லையோ, சாப்பாடு அனைவருக்குமே பிடித்த ஒன்று மட்டுமல்ல, உயிர் வாழ தேவையான ஒன்றும் கூட. நாம் உண்ணும் உணவை விரும்பி, சுவைத்து உண்டால் தான் உடலில் ஒட்டும் என்று கூறுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சமையல் பிடிக்கும். காரசாரமான, மசாலா நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவுகள் தான் பெரும்பாலானோருக்கு பிடித்தவை. எந்த வகை சமையலாக இருந்தாலும் சரி, அவற்றில் சில பொருட்கள் கட்டாயம் இடம் பிடிக்கும்.  அவற்றில் ஒன்று தான் வெங்காயம் மற்றும் பூண்டு. இந்தியாவை பொறுத்தவரை, வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாத சமையல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இவை இரண்டுமே உணவின் சுவையை மேலும் கூட்டுவதோடு, உடலிற்கும் நிறைய ஆரோக்கிய பலன்களை வழங்குகின்றன. உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பது, அதிகப்படியான கொழுப்பை குறைப்பது, இயற்கை இரத்த சுத்திகரிப்பானாக செயல்படுவது, ஆன்டி-ஃபங்கல், ஆன்டி-பாக்டீரியல் பண்புகளை கொண்டிருப்பது மற்றும் ஆன்டி-பயாடிக்காக செயல்படுவது என இவற்றின் ஆரோக்கிய பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பல்வேறு சுகாதார நன்மைகள் இவற்றில் இருந்தபோதிலும், பலர் வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்ப்பதை பார்க்க முடிகிறது. கூடுதலாக, பல காரணங்களால் இவ்விரண்டையும் சாப்பிட வேண்டாம் என்று பலர் அறிவுறுத்தப்படுவதையும் பார்க்கிறோம். இவற்றிற்கு என்ன தான் காரணம்?

வெங்காயம் மற்றும் பூண்டு
ஆயுர்வேதம் மற்றும் ஒரு சில மேற்கத்திய ஆராய்ச்சிகளின்படி, வெங்காயம் மற்றும் பூண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக எப்போதும் இருக்காது என்று கூறப்படுகிறது. சிலருக்கு வேண்டுமானால் இது உண்மையாக இருக்கலாம் என்றாலும் கூட, வேறு எத்தகைய நம்பிக்கையையும் இக்கட்டுரை மூலம் வளர்க்க விரும்பவில்லை. வெங்காயம் மற்றும் பூண்டு உட்கொள்வதில்லை என்பதற்காக கூறப்படும் காரணங்கள் (ஆயுர்வேதத்தின்படி) மாறுபடுகின்றன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இத்தகைய காரணங்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன.மேலும், எக்காரணம் கொண்டும் இவற்றை பொதுமைப்படுத்தவே முடியாது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உட்கொள்ளாததன் பின்னணியில் கூறப்படும் 5 காரணங்களை பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

சக்தி வாய்ந்த பண்புகள்
பூண்டு ஒரு சக்திவாய்ந்த மூலிகை ஆகும். மேலும், ஆயுர்வேத மருத்துவர்கள் இதை மருந்தாக மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால், தினசரி உணவுகளில் இதனை உட்கொள்ள ஒருபோதும் பரிந்துரைக்கப்படுவது கிடையாது. இது ஒரு சக்திவாய்ந்த ஆன்டிபயாடிக். பூண்டு (குறிப்பாக பச்சையாக பூண்டை சாப்பிடுவது) கெட்ட கிருமிகளை மட்டுமல்ல, உடலிற்கு தேவையான மற்றும் முக்கியமான நட்பு பாக்டீரியாக்களையும் கொல்லும் என்றும் கூறப்படுகிறது. ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று உயிர் சக்திகள் உண்டு. அவை ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்துவமான உடலமைப்பை வழங்குகின்றன.

பித்தம் ஆனது தீ மற்றும் நீரின் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உடலில் உள்ள அனைத்து வளர்சிதை மாற்ற செயல்முறைகளையும், உடலின் வெப்பநிலை மற்றும் ஹார்மோன் சமநிலையையும் கட்டுப்படுத்துகிறது.சல்பர் நிறைந்த எந்த மூலப்பொருளோ, வெங்காயம் மற்றும் பூண்டு மிகவும் வெப்பத்தை உண்டாக்கக்கூடிவை. அவை உடல் மற்றும் உணர்ச்சி மட்டங்களில் பித்தத்தை மிகவும் மோசமாக்குகின்றன. அமில பிரதிபலிப்பு, புண்கள், பெருங்குடல் அழற்சி, நெஞ்செரிச்சல், குடல் அழற்சி, சரும வெடிப்பு அல்லது சிவத்தல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த இரண்டு பொருட்களையும் சாப்பிடுவதால், பிரச்சனை மேலும் மோசமாக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உண்மையான காரணம்!
வெங்காயம் மற்றும் பூண்டு உட்கொள்வது கோ பம், ஆக்ரோஷம், அறியாமை, சோம்பல், பதட்டம் மற்றும் பாலியல் ஆசை அதிகரிப்பு போன்ற சில எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்துவதாக ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தியானம் செய்வோர் அல்லது ஆன்மீக பாதையை பின்பற்ற விரும்புவோர், வெங்காயம் மற்றும் பூண்டு உட்கொள்வதை முற்றிலுமாக தவிர்க்கின்றனர்.

மனநிலை பாதிக்கப்படலாம்

வெங்காயம், பூண்டு போன்ற ராஜ்சிக் உணவுகள் ஒருவரின் மனநிலையில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. அவை ஒரு நபரின் கவனத்தை சிதறச்செய்யலாம், மனநிலையை பாதிக்கலாம், மேலும் நிலையற்ற புத்தியையும் ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. ராஜ்சிக் உணவு என்பது சூடான, காரமான மற்றும் உப்பு நிறைந்த உணவுப் பொருட்களின் கலவையாகும். இது எதிர்மறை, ஆர்வம், அமைதியின்மை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.

பூண்டு பற்றி ஆய்வு முடிவு

1980-களில் டாக்டர் ராபர்ட் [பாப்] சி. பெக் நடத்திய ஆய்வின் படி, பூண்டு மூளைக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. பூண்டு மனிதர்களுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது என்று பெக் கண்டறிந்தார்.
ஏனெனில் அதன் சல்போன் ஹைட்ராக்சில் அயனிகள் மூளைக்கான இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுத்தவோ அல்லது மூளை செல்களுக்கு விஷத்தை ஏற்படுத்தவோ கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *