தர்பூசணிப்பழத்தை எந்த நேரத்தில் சாப்பிடலாம் !! இந்த நேரத்தில் சாப்பிட்டால் பின் விளைவுகள் வருமாம் !!

விந்தை உலகம்

வெயில் காலத்தில் அதிகமானவர்கள் விரும்பி சாப்பிடம்பழம் தர்பூசணிப்பழத்தை தான் என்றே கூறலாம்.  இந்த பழம் தாகத்திற்கு மட்டும் இன்றி  உடலில் குளிச்சிக்கும் இது இருப்பதால் அதிகமாவார்கள் இதை பயன்படுத்துவதுண்டு வெயில் காலம் துவங்கிவிட்டாலே சில பழங்களின் வரத்து அதிகரித்துவிடும். ரோட்டோரக் கடைகளிலிருந்து எல்லாருடைய வீடுகளிலும் இடம்பெற்றிருக்கூடிய ஒரு பழம் என்று சொன்னால் அது தர்பூசணிப்பழம் தான். வெயில் காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய ஓர் பழம் அது.

 

அதில் ஏராளமான நீர்சத்து நிறைந்திருக்கிறது அதனால் அந்தப் பழத்தினை தாரளமாக சாப்பிடலாம். வெயில் காலத்தில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், நம் உடலில் நீர்ச் சத்து குறைந்திடாமல் இருக்கவும் இது போன்ற பழங்களை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.பல இடங்களில் தர்பூசணிப்பழம் பற்றிய நன்மைகளையெல்லாம் படித்திருப்பீர்கள், தற்போது சில புதுமையான தகவல்களையும், தர்பூசணிப்பழத்தினால் பின்விளைவுகள் ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் சிலருக்கு தர்பூசணிப்பழத்தினால் அலர்ஜி ஏற்பட்டிருக்கும் ஆனால் அதனை நாம் கவனிக்காமல் விட்டுவிடுவோம், இதனால் உடல் நல பா திப்பினை சந்தித்து பெரும் அவதிக்கு உள்ளாக வேண்டி வரலாம்.

 

தூக்கம் – இந்த நேரத்தில் தான் தர்பூசணிப்பழத்தினை சாப்பிட வேண்டும் என்று எந்த குறிப்பிட்ட நேரமும் இந்தப்பழத்திற்கு இல்லை. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தாரளமாக சாப்பிடலாம். ஆனால் தூ ங்குவதற்கு முன்னால் தூங்க அரை மணி நேரத்திற்கு முன்னால் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். அப்படி சாப்பிடுவதினால் உஙக்ளுக்கு ஏரளமான பின்வி ளைவுகள் ஏற்படக்கூடும்.

 

செரிமானம் – தர்பூசணிப்பழம் செரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும், இதனை நீங்கள் தூ ங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக எடுத்துக் கொள்வதால் செரிமானம் இன்னும் தாமதமாகும். ஏற்கனவே இரவு உணவு சாப்பிட்டிருப்பீர்கள் அதன் பிறகு இந்த பழமும் சாப்பிட்டு விடுவதால் முதலில் சாப்பிட்ட உணவும் செரிமானம் அடைய தாமதம் ஏற்படும். மறுநாள் வயிற்றுவலி, அல்லது மலச்சிக்கல் தொல்லை ஏற்படலாம்.

 

இரவு உணவு – பொதுவாக பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் செரிமானம் மிக தாமதாமகத்தான் நடைபெறும் அதனால் தான் இரவில் ஹெவியான உணவுகளை எடுக்காதீர்கள். எளிதாக ஜீரணம் ஆகக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் போதுமானது என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் ஆசிட் நிறைந்த உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. தர்பூசணிப்பழத்தில் இவை இரண்டுமே அதிகம் இருக்கின்றன

 

சர்க்கரை – தர்பூசணிப்பழத்தில் அதிகளவு தண்ணீர் சத்து மற்றும் சர்க்கரை அதிகமிருக்கிறது. சர்க்கரை அதிகம் கொண்ட உணவுப்பொருளினை சாப்பிடுவதால் ரத்தத்தில் குலுக்கோஸ் அளவு அதிகரிக்கும், இதனால் மூளை சுறுசுறுப்படையும். மூளை அமைதியாகி தூங்க வேண்டிய நேரத்தில் புதுப்புது சிந்தனைகள் தோன்றினால் எங்கிருந்து தூக்கம் வரும்? அதே போல இதில் தண்ணீர் சத்து அதிகமிருப்பதால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இதனால் சீரான தூக்கம் கெட்டுப் போகும்.

 

பழங்கள் – பொதுவாக பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். தர்பூசணிப்பழத்தினை காலை மற்றும் மதியம் ஆகிய பகல்வேலைகளில் சாப்பிடுவது மிகவும் நல்லது. தர்பூசணிப்பழத்தினை கட் செய்து ஃபிர்ஜில் வைப்பது அல்லது நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவது ஆகியவற்றை தவிர்த்திடுங்கள். தர்பூசணிப்பழம் ஃபிரஷ்ஷாக சாப்பிடுவது தான் நல்லது. தொடர்ந்து ஒரே நேரத்தில் அதிகப்படியாகவும் தர்பூசணிப்பழத்தினை சாப்பிடக்கூடாது அப்படிச் சாப்பிடுவதினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தர்பூசணிப்பழத்தில் தண்ணீர் சத்தை தாண்டி வேறு சில சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. அதில் லைகோபென் அதிகம். இதனை அதிகம் எடுக்கும் போது நம் உடலிலும் லைகோபென் அதிகம் சேர்ந்திடும். இதனால் வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், செரிமானக்கோளாறு, வாந்தி ஆகியவை ஏற்படுத்தும். வயதானவர்களுக்கு இதன் ப க்கவி ளைவுகள் சீக்கிரத்திலேயே தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *