உங்கள் கால் விரலை வைத்து உங்க இதயம் ஆரோக்கியமா இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம்…எப்படின்னு தெரியுமா !!

விந்தை உலகம்

ஒரு மனிதனுடைய ஆரோக்கியத்தில் பெரிதும் பங்கு செலுத்துவது இதயம் ஆகும். அப்படிப்பட்ட இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாத்து கொள்ளவது ஒவ்வொருத்தருடைய கடமையாகும். உங்கள் இதயம் ஆரோக்கியமா தான் இருக்கா? அதைத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இதயத்தின் ஆரோகியத்தை கண்டறிய உதவும் ஓர் எளிய வழியைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

 

ஒவ்வொருவரும் தங்களின் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா இல்லையா என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதனால் தி டீ ரெ ன் று மாரடைப்பால் ம ra  ண ம்  ஏற்படுவதைத் தடுக்கலாம். சமீபத்திய ஆய்வு ஒன்றில், யாரால் கையால் கால்களை மடக்காமல் கால் விரல்களைத் தொட முடிகிறதோ, அவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

முதலில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்களை நீட்டி, பின் கையால் கால்விரல்களைத் தொட வேண்டும். அப்படி உங்களால் தொட முடிந்தால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். அமெரிக்காவின் வடக்கு டெக்ஸாஸில் மேற்கொண்ட ஆய்வில், 20-83 வயதிற்குட்பட்ட சுமார் 526 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் ஒவ்வொருவரையும் கால்களை மடக்காமல் கையால் கால் விரல்களைத் தொடுமாறு செய்தனர்.

 

இப்படி ஒவ்வொருவரும் முயலும் போதும், அவர்களது இ ra  த் த  அழுத்தம் அளவிடப்பட்டது மற்றும் அவர்களின் தமனி மற்றும் இதயத்தின் செயல்பாடும் கூர்மையாக கண்காணிக்கப்பட்டது. இந்த ஆய்வின் இறுதியில், இதய பிரச்சனைகள் உள்ளவர்களால் கால் விரல்களைத் தொட முடியாமல் இருப்பது தெரிய வந்தது.

 

இந்த முறையால் நேராக அமர்ந்து, கால்விரல்களைத் தொட முடிந்தால், இதயம் நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை முடியாவிட்டால், உங்கள் இதய நோய்கள் வரும் வாய்ப்பு உள்ளது என்றும், இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருப்பது போல் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *