மக்கா சோளத்தை இப்படி சாப்பிட்டால் குடல் புற்றுநோயை விரட்டி அடிக்கலாம் !!

மருத்துவம்

உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு உணவுத் தானியம், உலகில் அதிகம் பயிரிடப்படும் பயிர் இதுவே ஆகும். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசிலின் தென் பகுதியில் வாழ்ந்த அமெரிக்க முதற்குடிமக்கள் (பூர்வகுடிகள்) முதன் முதலாக உணவுக்காக மக்காச்சோளத்தைப் பயிரிடத் தொடங்கினர். இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு விதவிதமான நோய்கள் வந்து கொண்டுதான் உள்ளது. இவர்களின் நோய் பெருக்கத்துக்கு தாறுமாறான அவர்களின் உணவுப்பழக்கமும் கலாச்சாரமுமே காரணம். முந்தைய தலைமுறையின் ஆரோக்கிய உணவுப்பட்டியலில் இருந்து இப்போது வெகுதூரம் நகர்ந்து வந்துவிட்டோம். அப்படி நாம் தவறவிட்ட உணவுகளில் மக்கா சோளமும் உண்டு.

வீரிய மக்கா சோளம் சாகுபடி — விகாஸ்பீடியா

இது முதலில் நடு அமெரிக்காவில்  பயிரிடப்பட்டு பின்னர் அமெரிக்கா கண்டம் முழுதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பியர்களுக்கு அமெரிக்காவுடன் ஏற்பட்ட தொடர்புகளைத் தொடர்ந்து இது உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது.சோளத்தில் பார்லி அரிசிக்கு நிகரான சத்துகள் இருக்கிறது. இதில் கோதுமையில் இருக்கும் அனைத்து புரதமும் இருக்கிறது. இது சிறுநீரைப் பெருக்கும் என்பதால் உடலில் உள்ள உப்பையும் எளிதில் கரைத்துவிடும். அதேபோல் இது அனைத்து வயதினருக்கும் எளிதில் செரிக்கக்கூடியது.

Geopolitics helps maize market | 2020-01-24 | World Grain

கூடவே கண் குறைபாட்டையும் போக்கும். கூடவே உடலுக்கு, ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு குடல் புற்றுநோய் வராமலும் காக்கும். இரத்ட சக்கரையையும் சம அளவில் வைத்திருக்கும். இரத்தத்தில் கொழுப்பை குறைத்து இதயநோய் அபாயத்தில் இருந்தும் காக்கும். மக்காச்சோளத்தின் பல வடிவங்கள் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் மக்காச்சோளத்தில் இருக்கும் மாவுச்சத்தின் அளவைப் பொறுத்து துணை இரககங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

Maize - Wikipedia
  • மாவு மக்காச்சோளம்: சியா மேஸ் வர். அமிலேசியா
  • சோளப்பொறி மக்காச்சோளம் (Popcorn): சியா மேஸ் வர். எவர்டா
  • குழி மக்காச்சோளம் (Dent corn) : சியா மேஸ் வர்.இன்டென்டேட்டா
  • கடின மக்காச்சோளம் (Flint corn): சியா மேஸ் வர். இன்டுரேட்டா
  • இனிப்பு மக்காச்சோளம் (Sweet corn): சியா மேஸ் வர். சச்சராட்டா மற்றும் சியா மேஸ் வர். ருகோசா
  • மெழுகு மக்காச்சோளம் (Waxy corn): சியா மேஸ் வர். செரட்டினா
  • அமைலோ மக்காச்சோளம் (Amylomaize): சியா மேஸ்
  • உறைய மக்காச்சோளம் (Pod corn): சியா மேஸ் வர். டியூனிகேட்டா
  • வரி மக்காச்சோளம் Striped maize: சியா மேஸ் வர். ஜப்போனிக்கோ

இப்போது இந்த மக்கா சோளத்தை எப்படி ருசியான பதார்த்தமாக செய்யலாம் என பார்ப்போம்.

முதலில் ஒரு கடாயில் மூன்று சோளத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு டம்பளர் அளவுக்கு கெட்டியான பால் சேர்க்க வேண்டும். இதனோடு மூன்று டம்ளர் அளவுக்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். இதனோடு ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு வெண்ணெய் சேர்க்க வேண்டும். கால் ஸ்பூன் அளவுக்கு உப்பு சேர்த்து இதை மூடிவைத்து மீடியம் அளவு ஹீட்டில் பத்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர் இதை திறந்து பார்க்கலாம்.

Local maize industry reaches for gold – AgriOrbit

இப்போது கேஸை அணைத்துவிட்டு மிதமாக ஆறவைக்க வேண்டும். மிதமான சூட்டிலேயே இதை எடுத்து சோளத்தை தனித்தனியாக கத்தியால் வெட்டி முத்துகளை தனியாக எடுத்துவிடலாம். இந்த முத்துக்களை ஒரு கின்னத்தில் போட்டு ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

PREMIUM QUALITY MAIZE GRAINS FOR EXPORT, View yellow corn grains for sale,  NIK-MAY EXPORTS LLP Product Details from NIK-MAY EXPORTS LLP on Alibaba.com

இதை நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இதோடு அரை ஸ்பூன் அளவுக்கு உப்பு சேர்த்து சாப்பிட்டாலே நன்றாக இருக்கும். இதோடு அரை ஸ்பூன் அளவுக்கு மிளகாய்தூள் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் ரொம்ப ருசியா இருக்கும். செய்முறை வீடியோ கீழே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *