விண்வெளியில் செய்த வி சித்திர பீட்சா !! மிதக்கும் பீட்சாவை பங்கிட்டு சாப்பிட்ட காட்சி !!

விந்தை உலகம்

பீட்சாவை விரும்பத்தவர் கிடையாது. இந்த பீட்சாவுக்கு அடிமையாகி போனவர்கள் அதிகமானவர் இருப்பார்கள். இவ்வாறான பீட்சா நம்ம ஊர்களில் தானே செய்து கொடுக்க படும் ஆனால் தற்பொழுது விண்வெளியில் பீட்சா செய்து சாப்பிட்ட ஆராய்ச்சியாளர்கள் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது விண்வெளி கூடத்தில் ஆய்வாளர்கள் பீட்சா செய்து சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

உலகின் பல நாடுகளின் விண்வெளி ஆய்வாளர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விண்வெளியில் ஈர்ப்பு விசை அற்ற நிலையில், அவர்கள் எப்படி அன்றாட வாழ்வை நகர்த்துகிறார்கள் என்பது தொடர்பாக, உடற்பயிற்சி செய்வது, தண்ணீர் அருந்துவது என பல வீடியோக்களை நாசா வெளியிட்டுள்ளது.

 

தற்போது, ஆய்வாளர்கள் பீட்சா செய்து சாப்பிட்ட சுவாரசியமான வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் பீட்சா தயாரிக்கும் காட்சியும், பின்னர் விண்வெளியில் மிதக்கும் அந்த பீட்சாவை அனைவரும் பங்கிட்டு சாப்பிட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த வீடியோ காட்சிகள்……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *