புதன் பகவானின் சஞ்சரிப்பால் அடிக்கப்போகும் ராஜயோக பலன்கள் !! எந்தெந்த ராசிக்கு என்று தெரியுமா !!

ஆன்மீகம்

கிரகங்களின் இளவரசன் என போற்றப்படும் புதன் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு டிசம்பர் 17ம் தேதி பெயர்ச்சி ஆனார். இதில், கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான். பேச்சு, வர்த்தகம், பணம், செல்வம் ஆகியவற்றின் காரணியாகப் புதன் கருதப்படுகிறது. குருவின் ராசியான தனுசுவில் புதன் பகவான் சஞ்சரிப்பதால் எந்த ராசிக்கு எப்படிப்பட்ட பலனைத் தருவார் என்பதை பற்றி பார்ப்போம்.

 

​மேஷம்
உங்கள் ராசிக்கு புதன் பகவான் மூன்றாவது மற்றும் ஆறாவது வீட்டு அதிபதியாவார். இந்த பெயர்ச்சியின் காரணமாக உங்கள் ஜாதகத்தின் ஒன்பதாவது வீட்டில் புதன் சஞ்சரிப்பதால். இடமாற்றம், மரியாதை மற்றும் சமூகத்தில் உங்கள் நிலை உயரும். நீண்ட தூர பயணங்கள் செல்ல வாய்ப்பு ஏற்படும். பெயர்ச்சியின் விளைவாக, பல வகையில் நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். பயணங்களால் சில அசௌகரியம் ஏற்படும். அலைச்சலும் வீண் செலவும் ஏற்படலாம்.

 

ரிஷபம்
ரிஷப ராசி அதிபதி சுக்கிர பகவானின் நண்பரான புதன் கிரகம், உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டிற்குள் நுழைகிறார். இதனால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அடிக்கும். அதே சமயம் வாழ்க்கையில் நீங்கள் விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடக்கலாம். மேலும், சில சவால்களை எ திர்கொள்ள வேண்டி வரும். உங்கள் ராசிக்கு சில பணம் இ ழப்பு ஏற்படலாம். குழந்தைகளைப் பொறுத்தவரை, கல்வியில் மேம்பாடு ஏற்படும்.

 

மிதுனம்
மிதுன ராசி அதிபதியான புதன் பகவான் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஏழாவது வீடு தொழில், வியாபார கூட்டாளி மற்றும் திருமண துணை ஆகியவற்றைக் குறிக்கிறது.உங்கள் ராசிக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகத்தில் சிறந்த லாபத்தை அளிக்கிறது. உங்கள் வணிகம் விரிவடையும். சிலர் புதிய திட்டங்களைக் கொண்டு வேலைகளைத் தொடங்கலாம்.

 

​கடகம்
உங்கள் ராசிக்கு 3 மற்றும் 12ம் வீட்டு அதிபதியான புதன் பகவான் உங்கள் ராசிக்கு ஆறாவது வீடான நோய், எ திரி, போட்டி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.இதனால் உங்களுக்கு, உடல் ஆரோக்கிய பிரச்னைகள், துன்பம், கடன் மற்றும் மோதல் போக்கு ஏற்படும்.சிலருக்கு தீங் கு வி ளைவிக்கும் பல மோ ச மான பலன்கள் நடக்கலாம். செலவுகளை அதிகரிக்கும், சி க் கல்களைச் சந்திக்க நேரிடும்.

 

​சிம்மம்
சிம்ம ராசிக்கு 2 மற்றும் 11ம் வீட்டு அதிபதியான புதன் ராசிக்கு 5ம் வீடான பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனம், விவேகம் கலைத்திறன் வெளிப்படும்.காதல் விவகாரங்களில் பல்வேறு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். புதனின் கிரக நிலை உங்களுக்கு நல்ல பலனைத் தருவதாக இருக்கும்.

 

கன்னி
உங்கள் ராசி அதிபதி 4ம் வீடான சுக, தாயார் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது பல்வேறு வகையில் நன்மையைத் தருவதாக இருக்கும்.உங்கள் உடல்நலம், சிந்தனை, தோற்றத்தின் நிறம், உருவம் மற்றும் தன்மையில் நல்ல மாற்றமும் மேம்பாடும் இருக்கும்.உங்கள் வாழ்வாதாரத்தையும் வணிக மற்றும் வேலையின் வேகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தாயின் ஆரோக்கியம் சிறக்கும். பல்வேறு வகையில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும்.

 

துலாம்
உங்கள் ராசிக்கு 3 வது வீடான தைரிய, வீரிய ஸ்தானத்தில் புதன் செல்வதால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் கேட்கும் திறன் அதிகரிக்கும். உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்படும்.உங்கள் வேலையின் ஸ்திரத்தன்மையும், உங்கள் உடன்பிறப்புகளால் நன்மையும் உண்டாகும். நீங்கள் முன்னெடுக்கும் செயல்களில் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் உங்கள் வேலையை துரிதப்படுத்தும்.

 

விருச்சிகம்
ராசிக்கு 2ம் இடத்தில் புதன் இருப்பதால் உங்களின் சொல், செயலில் கவனம் தேவை. உங்கள் மீதான மரியாதை குடும்பத்திலும், சமூகத்திலும் அதிகரிக்கும்.உங்கள் வருமானத்தில் அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் நிலைப்பாட்டுக்கு ஆதரவு ஏற்படும். குடும்பத்தில் சில புதிய பொறுப்புகள், வேலைகள் ஏற்க வேண்டி இருக்கும். உங்கள் மரியாதை அதிகரிக்கும்.

 

தனுசு

உங்கள் ராசியில் புதன் பகவான் சஞ்சாரம் செய்வது பல்வேறு வகையில் நல்ல பலனைத் தரும். தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பர்.உங்கள் ஆளுமை, உடல் தோற்றம் ஜொலிக்கும். சிலருக்கு பணியில் இடமாற்றம், மன அ ழுத்தம் ஏற்படக்கூடும். முன்பை விட நிதானமாக செயல்படுவது நல்லது.

 

மகரம்
மகர ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சில தேவையற்ற செலவுகள் ஏற்படக் கூடும். அதனால் செலவு செய்வதற்கு முன் நன்கு யோசித்து செய்வது நல்லது. சேமிப்பில் கவனம் தேவை.பண விரயம் மட்டுமல்லாமல் சில தேவையற்ற பயணங்களும், அதனால் அலைச்சல்களும் ஏற்படக்கூடும். ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் தேவை.

 

கும்பம்
கும்ப ராசிக்கு 11ல் புதன் பகவான் சஞ்சாரம் உங்களுக்கு கலவையான முடிவுகளைப் பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது.11 வது வீடு லாபத்தையும் வருமானத்தையும் குறிக்கிறது. அதனால் உங்களின் நிதி நிலை தொடர்ந்து வலுப்பெறும். உங்கள் திறமையை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்துவீர்கள்.

மீனம்
உங்கள் ராசிக்கு 10ம் இடமான கர்ம, தொழில் ஸ்தானத்தில் புதனின் சஞ்சாரம் உங்கள் தொழில், மற்றும் செயல்களில் வெற்றியையும், லாபகர நிலையைத் தரும். நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். அதோடு, முன்பை விட நல்ல முன்னேற்ற நிலை இருக்கும். உங்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *