செம்மையாக இளைஞர்களோடு கால்பந்து விளையாடிய மாடு..!! விறுவிறுக்கும் அசத்தலான போட்டி…!

காணொளி

. கேரளத்தில் இளைஞர்கள் மைதானம் ஒன்றில் இருந்து கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாடு ஒன்று, கால்பந்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்தது. பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. மாடு ஒன்று இளைஞர்களோடு சேர்ந்து செமையாக கால்பந்து ஆடுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது

மாட்டை விரட்டிவிட்டு, விட்டு பந்தை எடுக்க அந்த இளைஞர்கள் முயன்றனர். ஆனால் கடைசிவரை மாடு அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. ஒருகட்டத்தில் இளைஞர் ஒருவர் மாட்டின் காலில் இருந்து பந்தை தட்டி எடுத்தார். அப்போது இளைஞர்கள் தங்களுக்குள் பந்தை தட்டத் துவங்க துரத்திப்போய் மீண்டும் கால்பந்தை தன் வசப்படுத்தியது மாடு.

குறித்த அந்த காட்சி இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதை பிரபல கிரிக்கெட் போட்டி வர்ணனையாளர் ஹர்ஷா போகல் உள்பட பலரும் பகிர்ந்துள்ளனர்.

இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *