இந்த 5 ராசிக்காரங்களும் தந்தையாக கிடைக்க வரம் செய்து இருக்கனுமாம்! தாய் பாசத்தையும் மிஞ்சிடுவார்கள் : உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி

ஆன்மீகம்

பொதுவாக எல்லா பெற்றோர்களும் தங்களுடைய எல்லா குழந்தைகள் மீதும் சமமான அளவில் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துகின்றனர். எனினும் சில குழந்தைகள் மீது மட்டும் அவர்களுடயை பாசம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால் பல பெற்றோர் அதை வெளிப்படுத்துவதில்லை. சில பெற்றோர் அதைத் தெளிவாகவே வெளிப்படுத்துவர். அவ்வாறு தங்களின் குறிப்பிட்ட குழந்தைகள் மீது மட்டும் பெற்றோர்கள் அதிக பாசத்தை வெளிப்படுத்துவது

 

தவறில்லை என்றாலும் அதனால் மற்ற குழந்தைகளுக்கு தமது அன்பு பெற்றோரின் அன்பும் பாசமும் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது. ஆகவே எந்தெந்த ராசிக்கார பெற்றோருக்கு எப்படிப்பட்ட குழந்தைகளை அதிகம் பிடிக்கும் என்று இங்கு பார்க்கலாம்.

 

மேஷம்
மேஷ ராசிக்கார பெற்றோர் இயல்பாகவே உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டிருப்பர். அதனால் தங்களுடைய குழந்தைகளில் யாராவது ஒருவர் அதுப்போன்ற உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டிருந்தால், இயல்பாகவே அந்த குழந்தைகள் மீது கொஞ்சம் அதிக அன்பையும் அக்கறையைும் வெளிப்படுத்துவர். அதிலும் குறிப்பாக தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அவர்களின் குழந்தைகளில் ஒருவர் நடந்து கொண்டால் அந்த குழந்தையின் மீது தனி கரிசனத்தை வெளிப்படுத்துவர்.

 

மிதுனம்
ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்கார பெற்றோர், தங்களுடைய குழந்தைகளில் யாராவது ஒருவர் அதிகமான படைப்புத் திறனோடும், கலகலப்பாகவும் அதே நேரத்தில் எல்லோரோடும் சரளமாக உரையாடக்கூடிய குணமும் கொண்டிருந்தால், அந்த குழந்தையோடு அதிகம் ஒன்றிவிடுவர்.

 

சிம்மம்
சிம்ம ராசிக்கார பெற்றோர் இயல்பாகவே ஆதிகார குணமும், கொள்கைப் பிடிப்பும் கொண்டவர்கள். அவர்கள் தங்களுடைய குழந்தைகளை விலைமதிக்க முடியாத சொத்துக்களாகக் கருதுவர். அதிலும் அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப ஏதாவது ஒரு குழந்தை கொள்கைப் பிடிப்போடும், ஆதிகார குணத்தோடும் இருந்துவிட்டால், அந்த குழந்தையோடு மிகவும் நெருக்கமாக இருப்பர்.

 

துலாம்
துலாம் ராசிக்கார பெற்றோர் எல்லாவற்றிலும் சமநிலையை எதிர்பார்ப்பர். அதனால் குடும்ப உறவுகளில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் அவற்றைக் கையாள அதிகம் சிரமப்படுவர். இவ்வாறான பிரச்சினை மிகுந்த நேரங்களில் அவர்களின் குழந்தைகளில் யாராவது ஒருவர் அவர்களின் சூழலைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவியாக இருந்தால் அந்த குழந்தை மீது அதிக பாசத்தைப் பொழிவர்.

 

கும்பம்
கும்ப ராசிக்கார பெற்றோர் படைப்பாற்றல் மிகுந்தவர்கள் மற்றும் கற்பனைத் திறன் மிகுந்தவர்கள். ஆகவே அவர்களுடைய குழந்தைகளில் யாராவது ஒருவர் அவர்களின் படைப்பாற்றல் மிகுந்த வேலைகளில் விருப்பம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய வந்தால், அந்த குழந்தை மீது அதிமான அளவில் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *