தப்பித்தவறி கூட இந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிடாதீங்க !! ஆ ப த் துக ள் அதிகமாம் ஜா க்கிரதை !!

விந்தை உலகம்

இன்று நவீன வாழ்க்கை முறை காரணமாக மாறிப் போன சமையல் பாத்திரங்கள் வாயிலாக தினமும் நாம் சாப்பிடும் உணவில் சிறிது நஞ்சு கலந்துதான் சாப்பிட்டு இருக்கிறோம் என்றால் நம்ப முடிகிறதா ? உண்மையில் நாம் சமையல் செய்ய பயன்படுத்தும் உலோக பாத்திரங்கள் வாயிலாக நன்மையை விட தீமையே அதிகம் உண்டாகிறது.

 

சாதாரண அலர்ஜி முதல் தைராய்டு, நீர்க்கட்டி, கிட்னி பிரச்சனை, இதய நோய் , உ யி ர் க்கொ ல் லி நோயான புற்றுநோய் வரை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் பாத்திரங்கள் எவை ? அதனால் ஏற்படக்கூடிய தீமைகள் என்ன ? சமையலுக்கு உகந்த பாத்திரம் எது? என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

 

1. அலுமினிய பாத்திரங்கள் – அலுமினிய பாத்திரங்கள் விலை மலிவாக கிடைப்பதோடு, பயன்படுத்துவதற்கும் மிக எளிதாக இருப்பதால் பலரும் இதை அதிகம் பயன்படுத்துகிறோம்.இந்த பாத்திரத்தில் உள்ள அலுமினியம் என்னும் கனிமம் காற்றோடு வினைபுரிந்து அலுமினிய ஆக்ஸைடாக மாறி உணவு சமைக்கும் போது உணவோடு கலந்து நம் உடலுக்குள் போய்விடும். இதை ஜீரணிக்கக்கூடிய சக்தி நம் உடலுக்கு இயற்கையாக இல்லை. ஆகவே இது உடலில் டாக்ஸீனாக மாறி உள்ளுறுப்புகளையும் மிக எளிதாக பாதிக்கும். அலுமினிய பாத்திரங்கள் கரையும் தன்மை கொண்டது.

 

தொடர்ந்து ஒரே பாத்திரத்தை உபயோகிக்கும் போது நரம்பு மண்டல பாதிப்பு, கிட்னி பிரச்சனை, பக்கவாதம் உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகளுக்கு இந்த அலுமினிய பாத்திரங்கள் வழிவகுக்கும். இதில் சமைப்பதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. அலுமினியம் வேறு சில உணவுகளின் மூலமாகவும் நம் உடலுக்குள் செல்கிறது. குறிப்பாக மில்க் ஸ்வீட்,ஃபுட் பேக்கிங் போன்றவற்றில் அலுமினிய பாக்ஸ் அல்லது தட்டுகளை பயன்படுத்துகின்றனர். இது போன்ற பொருட்களையும் நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க வேண்டும்.

 

2.இண்டோலிய பாத்திரங்கள் – அலுமினியம் மற்றும் 4,5 உலோகங்கள் சேர்ந்த கூட்டு கலவை தான் இண்டோலியம். அலுமினிய பாத்திரங்களை ஒப்பிடும்போது இண்டோலிய பாத்திரங்கள் நல்லது என பலரும் நினைத்திருக்கின்றனர். ஆனால் இதுவும் நம் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது.

 

3.நான் ஸ்டிக் பாத்திரங்கள் – சமீப காலமாக மக்கள் அதிகம் உபயோகிக்கும் பாத்திரம் நான் ஸ்டிக். அலுமினியம் அல்லது வேறு உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தின் மேல் டெப்லா என்று சொல்லக்கூடிய ஒட்டா தன்மை உடைய ஒரு பொருளை கோட்டிங் செய்து இருப்பார்கள். இது தான் நான் ஸ்டிக். டெப்லா கோட்டின் என்பது பாலிடெட்ரா ஃபுளூரோ எத்திலீன் என்னும் வேதிப்பொருள் தான் இந்த கோட்டிங். இதை சூடேற்றும் போது எளிதில் ஆவியாகக்கூடும். இது உணவோடு கலந்து நம் உடலுக்குள் செல்லும் போது நேரடியாக தைராய்டு ஹார்மோன்கள் பாதிக்கும்.மேலும் செரிமான பிரச்சனை முதல் குடல் புற்றுநோய் வரை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

 

4. செம்பு பாத்திரங்கள் – சமீப காலமாக சமூக வலைதளங்களில் காப்பர் பாத்திரங்களின் பயன்பாடு அதிகம் பரவி வருவதால் பலரும் இந்த செம்பு பாத்திரங்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். செம்பு பாத்திரங்கள் உடலிற்கு நல்லது.ஆனால் அதை முறையாக பராமரித்து பயன்படுத்துவது மிக முக்கியம். செம்பு பாத்திரங்களை முறையாக பராமரிக்காத போது இரும்பு பாத்திரங்கள் எப்படி துரு பிடிக்குமோ அது போல் இதிலும் க்ரீன் காப்பர் கார்போனேட் என்ற வேதிப்பொருள் உருவாகும்.இது ஒரு நச்சுப்பொருள். இது நம் உடலுக்குள் சென்றால் பல் சொத்தை, வயிற்று எ ரி ச் சல் , தோல் அ ரி ப் பு , கண் எ ரி ச்சல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

 

5.சில்வர் பாத்திரங்கள் – குரோமியம் மற்றும் நிக்கல் கலந்த கலவை தான் சில்வர் பாத்திரங்கள். இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் அதன் தரத்தில் தான் உள்ளது. நல்ல தரமான சில்வர் பாத்திரங்களில் குரோமியம் அதிகமாகவும்,நிக்கல் குறைவாகவும் இருக்கும். தரம் குறைந்த சில்வர் பாத்திரங்களில் நிக்கல் அதிகமாகவும் குரோமியம் குறைவாகவும் இருக்கும். இந்த வகை பாத்திரங்களை உபயோகிக்கும் போது நுரையீரல் பிரச்சனை மற்றும் கண் சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆகவே சில்வர் பாத்திரங்களை வாங்கும் போது ESI முத்திரை உள்ள பாத்திரங்களை வாங்கி உபயோகிக்கலாம்.

 

6.பித்தளை பாத்திரங்கள் – காப்பர் மற்றும் துத்தநாகம் கலந்ததுதான் பித்தளை பாத்திரங்கள்.இது நம் உடலுக்கு மிகவும் நல்லது. மூட்டு வலி,நோய் எ தி ர்ப்பு சக்தி குறைபாடு, அலர்ஜி போன்ற பல பிரச்சனைகளை குணமாக்கும் தன்மை இந்த பித்தளை பாத்திரங்களுக்கு உண்டு. ஆனால் இதில் ஒரு நிபந்தனை உள்ளது.அமில தன்மை உள்ள உணவு பொருட்களை இதில் உபயோகிக்கக்கூடாது. ஏனெனில் அமில தன்மையால் பித்தளை பாத்திரத்தில் உள்ள காப்பர் எளிதில் கரைந்து உணவோடு கலந்துவிடும். இது நம் உட லுக்கு கே டு வி ளைவிக்கும்.

 

7.மண் பாத்திரங்கள் – நம் முன்னோர்கள் நமக்கு காட்டிச் சென்ற மண் பாத்திரங்கள் 100% உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. இதில் சமைக்கும் போது உணவின் தரமும், சுவையும் அதிகரிப்பதோடு சத்துக்களும் கிடைக்கின்றன. இது எளிதில் ஜீரணமாகவும் செய்கிறது. வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ மண் பாத்திரங்கள் நமக்கு உதவி செய்கின்றன.

8.இரும்பு பாத்திரங்கள் – இது நம் உடலுக்கு மிகவும் நல்லது. இரும்பு பாத்திரத்தில் சமைக்கும்போது நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கிறது. இ ர த் த உற்பத்திக்கு இரும்பு சத்து மிகவும் அவசியம். துரு பிடிக்காத இரும்பு பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *