எந்தவொரு நோயும் நெருங்காமல் உங்களது ஆயுள் காலம் அதிகரிக்க வேண்டுமா? இந்த 3 பொருள் மட்டும் போதும்

மருத்துவம்

காலையில் இஞ்சியும், கடும் பகலில் சுக்கும், இரவில் கடுக்காயும் சாப்பிட்டு வந்தால் கோல் ஊன்றி குறுகி நடப்பவர்கள் கூட கம்பீரமாக நடப்பார்களாம்… இது சித்தர் பாடியுள்ள பாடலின் பொருளாகும். இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை.. இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தற்போது காணலாம். இஞ்சி: இஞ்சியின் தோலில்தான் நஞ்சு இருக்கிறது, எனவே தோலை உரித்தபின் அதனை உபயோகிக்க வேண்டும். இஞ்சி உண்ணும் முறை: காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும்வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.

மூலிகைகள்: இஞ்சி(Ginger),சுக்கு

சுக்கு: சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு பூசி காயவிடவும். பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்றாக ஆறிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும்.

சுக்கு மருத்துவ குணங்கள் || dry ginger medical benefits

சுக்கு உண்ணும் முறை: மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.

கடுக்காய்:

கடுக்காய் (Kadukkai) மருத்துவ பலன்கள் | Kadukkai Health Benefits, Usage  (Tamil)

கடுக்காயின் உள்ளிருக்கும் கொட்டையை எடுத்துவிடுங்கள். ஏனெனில் கொட்டை நஞ்சாகும். கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்து கொள்ளுங்கள். கடுக்காய் உண்ணும் முறை: இரவில் படுக்கும் போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிடவும். இது கபத்தை சமன் செய்யும். மலச்சிக்கல் குணமாகும்.

உடலின் அனைத்து பிரச்சனையையும் சரிசெய்ய.. இந்த காய் மட்டும் போதுமே! -  Lankasri News

மகிழ்ச்சியுடன் வாழ நாள்தோறும் ஆரோக்கியமான உணவை உண்டு வாழப் பழகிக் கொள்வதுடன் இந்த மூன்றையும் தினமும் செய்து வாந்தால் எந்தவொரு நோயும் நம்மை எட்டிக்கூட பார்க்காதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *