ஒரு இடத்தை விட்டு நகரக் கூட முடியாமல் எடை கொண்ட பெண் !! எப்படி ஸ்லிம் ஆனார் … ரகசியம் தெரியுமா!!

காணொளி

இன்றைய நாட்களில் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை உடல் எடை அதிகரிப்பாகும். எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டுமென்று பல வழிகளை செய்து முயற்சித்து வருகின்றோம். சிலர் மருந்து மாத்திரைகளை உண்டும் வேறு சிலர் செயற்கை முறையிலும் தங்களின் உடல் எடையை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றார்கள். 37 வயதான கரேன் ஷார்ப் என்ற பெண்ணுக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர் தனது சிறு வயதில் இருந்தே, அதிப்படியான சிப்ஸ், நூடுல்ஸ் மற்றும் சிக்கன் இது போன்ற கொழுப்பு மிக்க உணவுகளை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். ஒரு நாளைக்கு இவர் நொறுக்கு தீனிகள் மற்றும் மற்ற உணவுகள் சாப்பிடுவதற்காக £20 -ஐ செலவினம் செய்து வந்துள்ளார். இதனால் இவரின் உடல் எடை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே சென்றது. தனது உடல் எடையில் அதிக அக்கரை காட்டாமல் உணவில் கட்டுப்பாடின்றி இருந்துள்ளார்.

இதன் காரணமாக இவரின் உடல் எடை ஒரு குறிப்பிட்ட எடைக்கு மேல் அதிகரித்ததும் ஒரு இடத்தை விட்டு நகரக் கூட முடியாமல் அதிக சிரமத்திற்கு ஆளானார். பின் கரேன் தனது உடல் எடையை குறைப்பதற்காக ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு கரேனை பரிசோதித்த மருத்துவர்கள் சில வருடங்கள் ஆன பின்பு தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று கூறிவிட்டனர்.

அப்போது கரேன் நாம் ஏன் உடல் எடையை குறைக்க சில வருடங்கள் காத்திருக்க வேண்டும்? இயற்கையாக நாமே குறைக்கலாம் என்று முடிவெடுத்தார் இதனால் கரேன் ஒவ்வொரு நாளும் கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட்டை பின்பற்றுவதில் அதிக ஆர்வம் செலுத்தினார். கரேனின் கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சியின் காரணமாக அவர் உடல் எடையை குறைத்து தற்போது அவர் உடற்பயிற்சி வழிகாட்டி ஆலோசகராக இருந்து வருகிறார்.

இது மற்றையவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்ந்து வருகின்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *