முட்டையிலிருந்து வெளிவரும் ஆமை !! இதுவரை யாரும் பார்த்திராத அரியவகை காட்சி !!

விந்தை உலகம்

கடல் ஆமைகள் அரிய உயிரினமாக மாறி வருகிறது. கடலாமை என்பது ஊர்ந்து செல்லும் ஆமை பிரிவைச் சேர்ந்த பெருங்குடும்பம் ஆகும். இவை கடலில் வாழ்ந்தாலும் கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டிதான் முட்டையிடுகின்றன. கடல் ஆமைகளில் சில 150 வருடம்வரை கூட உயிர் வாழும். குறித்த காணொளியில் முட்டையிலிருந்து வெளிவரும் ஆமையின் காணொளி வைரலாகி வருகிறது.

 

ஆமைகளை, அவற்றின் மேல் ஓட்டின் வடிவத்தை வைத்துத்தான் இனம் பிரித்து அறிகிறார்கள்.ஆமைகளின் புதைபடிவங்கள் டிராசிக் காலத்தைச் சார்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன, அதாவது 245 மில்லியன் ஆண்டுகள் முன்பானது. இதனால் கடல் ஆமைகள் ஊர்வன இனத்தைச் சார்ந்திருப்பதால், ஊர்வன இனம் டைனோசர்கள் தோன்றும் முன்பாகவே இருந்ததை குறிப்பிடுகிறது.

 

உலகம் முழுவதும் கடல் ஆமைகள் 225 வகைகள் காணப்பட்டாலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் காணப்படுகின்றன.ஆமைகள் பற்றிய சில உண்மைகள் கட‌லி‌ல் வாழு‌ம் ஆமை வகைக‌ளி‌ன் கா‌ல்களே துடு‌ப்பு போ‌ன்று அமை‌ந்‌திரு‌க்கு‌ம். கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும். இவற்றில் சில இனங்கள் அழிவாய்ப்பை எதிர்கொள்கின்றன.

 

கடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை. தோல்முதுகுக் கடலாமை என்ற ஆமையினம் 900 கிலோகிராம் நிறை வரை வளர்கிறது. பொதுவாக உ‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் ஆமைகளு‌க்கு ‌நீ‌ண்ட ஆயு‌ள் உ‌ள்ளது. அத‌ன் இதய‌ம் ‌மிகவு‌ம் ‌நிதானமாக‌த் துடி‌ப்பதே அத‌ன் ‌நீ‌ண்ட ஆயுளு‌க்கு‌க் காரணமாக அமை‌கிறது.

 

முட்டையிலிருந்து வெளிவரும் ஆமையின் அரியவகை காட்சி !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *