இஞ்சியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனைச் சாப்பிடுவதால், உணவுகளில் தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன என்று நிறையத் தகவல்களை படித்திருப்போம். ஆனால், அவற்றை அதிகம் சாப்பிடும் போது ஏற்படும் ஆபத்து பற்றி அறிந்திருப்பீர்களா..?

அதிகமாய் இஞ்சியை சாப்பிடும்போது, அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்துவிடும். நெஞ்செரிச்சல், வயிற்று வலி ஆகியவைகளை எற்படுத்திவிடும். உங்கள் உடல் சென்சிடிவானது என்றால், இஞ்சியும் அலர்ஜியை ஏற்படுத்தக் கூடியதுதான்.

எப்போதெல்லாம் டீ குடிக்கின்றார்களோ அப்போதெல்லாம் இஞ்சி போட்டுக்கொள்ளவார்கள் இப்படியாவர்களிடம் காரணம் கேட்டால், இஞ்சி உடலுக்கு நல்லது என்று கூறுவார்கள்.

அதிகமாய் இஞ்சி டீ குடித்தால், நாக்கில் அரிப்பு, எரிச்சல், வாய்ப்புண், வயிறு எரிச்சல் ஆகியவை ஏற்படும். இஞ்சி டீ ர த் த அ ழு த்தத்தை குறைக்கும். குறைவான ர த் த அ ழு த்தம் இருப்பவர்கள் இஞ்சி டீ குடிப்பது உகந்தது அல்ல.
