புகழின் உச்சிக்கு செல்லப் போகும் ராசிக்காரர் யார் தெரியுமா? சஞ்சரிக்கும் சனிபகவானால் ராஜயோகம் !!

ஆன்மீகம்

நிகழப்போகும் சனிப்பெயர்ச்சியால் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்து நிம்மதி பிறக்கிறது. கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது. சில ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் கிடைக்கப் போகிறது. சனிபகவான் நீதிமான். அவர் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். 12 ராசிகளையும் கடக்க சனி பகவான் 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். மகரம் ராசியில் இருந்து சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. மீனம், கடகம், துலாம் ஆகிய ராசிகளின் மீது விழுகிறது. இந்த சனியின் சஞ்சாரம் பார்வையால் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியும் ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர்.

மேஷம்

சனி பகவான் மேஷம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெயர் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்கும்.

ஆட்சி பெற்ற சனியின் பார்வை ராசிக்கு 12ஆம் வீட்டில் விழுவதால் இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துங்கள். வெளிநாட்டு யோகம் செல்வதற்கு நேரம் கூடி வந்துள்ளது. நான்காம் வீட்டின் மீது சனியின் பார்வை விழுவதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சனி பார்வை உங்க ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுவதால் கணவன் மனைவி உறவில் கவனமாக இருங்க.

விட்டுக்கொடுத்து போங்க. காதலிப்பவர்கள் பேச்சில் கவனமாக இருங்க. பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்ற அதிக பணவரவும் லாபமும் கிடைக்கும். பாவ கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தால் முழு பலம் பெறும். அதுவும் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். தர்ம கர்மாதி யோகம் செயல்படும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். இனி வரும் காலம் அற்புதமான காலமாக அமையப்போகிறது.

இனி விடிவு காலம், புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தசாபுத்தியும் அற்புதமாக சேர்ந்தால் கோடீஸ்வரயோகம் தேடி வரும் காலம். அனைத்திலும் ஏற்றம் தரும் காலம் வரப்போகிறது. நிறைய தான தர்மங்கள் செய்யுங்கள் சனிபகவான் அள்ளிக்கொடுப்பார்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரிகளுக்கு அஷ்டமத்து சனி காலம் முடிந்து பாக்ய சனி காலம் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

இனி வரும் சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். காரணம் ராகு பகவானும் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார் குரு பகவானும் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கப் போகிறார்.

சனி பகவான் மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார். லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுவதால் பொருளாதார தடைகள் நீங்கும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும்.

தூரதேச பிரயாணம் கிடைக்கும். உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டினை சனி பார்வையிடுவதால் சகோதரர்களிடம் பேசும் போது கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.

வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் பொன்னான காலம். முழு அதிகாரத்தையும் சனி தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். சனி தனது சொந்த வீட்டுக்கு வருவதால் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும்.

வெற்றிகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. நோய்கள் தீரும் வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் விரட்டியடிப்பீர்கள்.

அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். மாணவர்கள் நிறைய மதிப்பெண்களை எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு இது செழிப்பான காலம். நிஜமாகவே இது ராஜயோக காலமாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை இருந்த ஏழரை சனி காலம் முடிவுக்கு வருகிறது. ஜென்ம கேது, மூன்றாம் வீட்டிற்கு நகரப்போகும் குரு என சிறப்பான கால கட்டமாக அமைந்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதல் ராஜயோகம் தேடி வரப்போகிறது. இது நாள் வரை கஷ்டங்களை அனுபவித்தவர்கள் இனி நல்லவைகளை அனுபவிக்கப் போகிறீர்கள். பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. திருமண விசயங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

உயர் பதவி யோகம் வரும். புதிய தொழில் அமையும். இனி ராஜ யோகம் தேடி வரப்போகிறது புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் காலத்தில் நிறைய லாபங்கள் கிடைக்கும். குரு பகவானும் பத்தாம் வீட்டில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

ராகு கேதுவும் இப்போது சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும்.

வெளிநாடு போகும் யோகம் வரும். வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய கௌரவம் அந்தஸ்து கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *