சனிப்பெயர்ச்சி 2020 … அஷ்டமசனியால் எப்படிப்பட்ட நன்மைகள் கொடுக்கபோகிறார் தெரியுமா !!

ஆன்மீகம்

சனி பெயர்ச்சி சார்வரி ஆண்டு மார்கழி மாதம் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகயுள்ளது.ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு இரண்டரை வருடம் ஆகும்.அந்த இரண்டரை வருடம் முழுவதும் சனிதேவர் தான் நின்ற ராசியில் இருந்து தனது சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடியவர் ஆவார்.

 

மிதுன ராசி : அஷ்டம சனி சனி நிற்கும் ஸ்தானம் : 8-ம் இடமான அஸ்டம ஸ்தானம் அஷ்டம சனி ஆரம்பம் அஷ்டமச் சனி – சனிதேவர் ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் நிலையே அஷ்டமச் சனியாகும். இந்த காலக்கட்டத்தில் நோய்களும், விபத்துகளும் ஏற்பட வாய்ப்புண்டு. அதுமட்டுமின்றி வீண் பழிகளும், அவமானமும் ஏற்படும். தொழில் முன்னேற்றம் இருக்காது.

 

மேலும் புதிய முயற்சிகள் தோல்வியைத் தர வாய்ப்புண்டு. உழைப்பிற்கேற்ற ஊதியம் இருக்காது.திறமைக்கேற்ற மதிப்பு இருக்காது. மேல் அதிகாரிகள் மிரட்டல் மற்றும் அவர்களுடன் வம்பு போன்ற கசப்பான நிகழ்வுகள் நடைபெறும். சனிப்பெயர்ச்சி பலன்கள் – எல்லா உயிர்களையும் ஒன்றாக எண்ணி தர்ம நீதிகளுக்கு கட்டுப்பட்டு உயிர்களை தேவ மற்றும் நரக லோகத்திற்கு அழைத்து செல்லும் எமதர்மராஜவின் சகோரன் என்பதுடன்,

 

உலகிற்கு ஒளி அளித்து இருளை நீக்கி வரும் உலகில் பிறந்த அனைத்து உயிர்களின் ஆத்ம காரகன் என அழைக்கப்படும் சூரிய பகவானின் புதல்வன் நம் சனிபகாவன் ஆவார். நவகிரகங்களில் நம் கர்மவினைக்கு ஏற்ப தன் தசா காலங்களில் அதற்கான பலன்களை அளிக்கக்கூடிய நீதிமான் என எல்லோராலும் அழைக்கப்படுபவர் சனிபகவான் ஆவார்.

 

அவர் கொடுக்க நினைத்தால் எவராலும் தடுக்க முடியாது. கெடுக்க நினைத்தாலும் எவராலும் தடுக்க முடியாது. சனிபகவான் இருக்கும் இடத்தை மட்டும் கெடுக்காமல், அவர் பார்வைப்படும் இடங்களையும் கெடுப்பார். இவர் துன்பத்தை மட்டும் கொடுக்காமல், இன்பத்தையும் ஒருவரின் கர்மவினைக்கு ஏற்ப கொடுப்பார்.

 

எதிலும் அளவற்ற நிலையை கொண்டவர் சனிபகவான். இன்பமானாலும், துன்பமானாலும் அளவு என்பது இல்லை. எந்த அளவிற்கு அவரால் துன்பம் ஏற்படுகிறதோ அதே அளவிற்கு எதுவாயினும் சரிசமமாக அனுபவிக்க வேண்டும். இத்தொழிலை சனிபகாவன் நல்ல முறையில் செய்கிறார்.

 

சனிபகாவன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கும் செல்லும் காலம் 2 1/2 ஆண்டுகள் ஆகும். ஒருவரது ராசியில் சனி திசை 19 வருடங்கள் நடக்கும். சனி இருக்கும் இடத்தை பொறுத்தே சுப பலன்களோ அல்லது அசுப பலன்களோ உண்டாகும். சனிபகவான் ஜோதிடத்தில் ராசி கட்டத்தில் நிற்கும் இடத்திற்கு தகுந்தாற் போல் தன் பலனை செயல்படுத்துகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *