இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச் !! எப்படி என்று தெரியுமா !!

விந்தை உலகம்

எல்லோருக்குமே கைகளில் வாட்ச் அணியும் பழக்கம் இருக்கும், சிலர் இதனை ஸ்டைல் ஆக அணிவார்கள், சிலர் அலுவலக பாவனைக்கு இன்னும் சிலர் நேர பாவனைக்கு என ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு தேவையின் நிமித்தம் வாட்ச் அணிகிறவர்களாக இருக்கிறார்கள். இப்படி அணிந்த வாட்ச் ஒன்றினால் இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றிய நிகழ்வு ஒன்று வைரலாகி வருகிறது

 

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவரின் உயிரை ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.அமெரிக்கா கான்சாஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஹீதர் ஹெண்டர் ஷாட்(25) . சமீபத்தில் தான் இவருக்கு குழந்தை பிறந்துள்ளது.இந்நிலையில், தன் உடல்நலத்தை கண்காணிப்பதற்காக ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சினை வாங்கியுள்ளார்.

 

கடந்த மாதம், திடீரென்று, ஹீதருக்கு இதயத்துடிப்பு அதிகரித்திருப்பதை, அவரது ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை ஒலி எழுப்பி காட்டியுள்ளது.ஆனால், தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஸ்மார்ட் வாட்சில் தான் ஏதோ கோளாறு என அலட்சியமாக விட்டு அலாரத்தை ஆஃப் செய்துள்ளார்.இருந்தபோதிலும், அடுத்த 24 மணி நேரமும் ஹீதர் கையில் இருந்த ஸ்மார்ட் வாட்ச் ஒலி எழுப்பிக் கொன்டே இருக்க, ஹீதரின் கணவர் வாட்சினை வாங்கி கட்டிப் பார்த்துள்ளார். அப்போது, வாட்சி ஒலி எதும் எழுப்பாமல் சீராக இருந்துள்ளது.

 

இதனால், அவர் தனது மனைவியை வற்புறுத்தி உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச்ன் சென்றிருக்கிறார். மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்துள்ளனர். அதில், அதிர்ச்சியூட்டும் விதமாக ஹீதருக்கு ஹைபர் தைராய்டிசம் பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது.

 

பொதுவாக ஹைபர் தைராய்டிசம் ஏற்பட்டால் உடலில் பல அறிகுறிகள் வெளிப்படும். ஆனால் ஹீதருக்கு அப்படி எந்த அறிகுறியும் தென்படவில்லை.எனவே ஹீதரின் வாட்ச் மட்டும் எச்சரிக்கை ஒலி கொடுக்காமல் இருந்திருந்தால் அவர் தனது பிரச்சினையை கவனிக்காமலே விட்டிருந்து, அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *